எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செயலின் செயல் நம்மைச் சுற்றி ஒரு செயல் நடைபெறும்போது...

  செயலின் செயல்   


                     நம்மைச் சுற்றி ஒரு செயல் நடைபெறும்போது அதை உற்று நோக்கினால் அது இரண்டு விதமான தன்மைகளைத் தன்னுள் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஒன்று     : தேவையுடைய செயல்     
இரண்டு : தேவையற்ற செயல்  

                     நம்மைச் சுற்றி பல்வேறு விதமான செயல்கள் நடைபெற்றாலும் அந்த  செயல் தேவையுடைய செயலா அல்லது தேவையற்ற செயலா என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு செயலில் உள்ள உண்மைத் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். 

                     ஒரு செயல் தேவையுடைய செயலா,  தேவையற்ற செயலா என்பது அவரவர் மன நிலையைப் பொறுத்து மாறுபடும். 

                     செயலைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவரவர் சிந்தனையைப் பொறுத்தும்; அனுபவத்தைப் பொறுத்தும்; அறிவைப் பொறுத்தும்; புத்தியைப் பொறுத்தும்; மாறுபடும்.

       ஒரு செயல் தேவையுடைய செயலா தேவையற்ற செயலா என்பதைத் தீர்மானிக்கும் ஒருவரால் மட்டுமே சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவராகவும், அறிவில் உயர்நிலை அடைந்தவராகவும், வாழ்வில் சிறப்புநிலை அடைந்தவராகவும், அனுபவத்தில் வியக்கும் நிலை அடைந்தவராகவும், தன்னலம் அற்றவராகவும், பொதுநலம் கொண்டவராகவும், சமுதாயத்தில் நிலவி வரும் இழிவுகளை எதிர்ப்பவராகவும், குறைகளை சுட்டிக் காட்டுபவராகவும், தவறுகளை ஏற்றுக் கொள்ளாதவராகவும், இருப்பார். 

                     சமுதாயம் எப்போதுமே இரண்டு மாறுபட்ட கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது. தேவையுடைய செயலை தேவையற்ற செயல் என்றும் தேவையற்ற செயலை தேவையுடைய செயல் என்றும் தன்னுடைய அறிவுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்கிறது. 

                     தனக்கு பலனளிக்கும் என்றால் தேவையற்ற செயலை தேவையுடைய செயல் என்றும், தனக்கு பலனளிக்கவில்லை என்றால் தேவையுடைய செயலை தேவையற்ற செயல் என்றும், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்கின்றனர்.

எது தேவையுடைய செயல் எது தேவையற்ற செயல் என்பதை  பலராலும் தீர்மானிக்க முடியாமல்   தேவையுடைய செயலை தேவையற்ற செயல் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 

தேவையுடைய செயலை தேவையற்ற செயல் என்று நினைத்து விட்ட காரணத்தினால் பெரும்பாலானர்களால் தேவையுடைய செயல் எது என்று  உணர முடியாமல் தேவையுடைய செயலை தேவையற்ற செயல்  என்று தீர்மானிக்கின்றனர். 

சமுதாயத்தில் நடைபெற்று வரும் ஒரு செயலை தேவையுடைய செயலா தேவையற்ற செயலா என்பதை தீர்மானிக்க முடியாமல் தேவையுடைய செயலை தேவையற்ற செயலாக எண்ணி தேவையுடைய ஒரு செயலை தேவையற்ற செயல் என்று தவறாக எண்ணி அதை சமுதாயத்தில் அனைவர் மனதிலும் தேவையற்றது என்பதை விதைக்க ஆரம்பித்து விட்டனர்.

அதனால் சிந்திக்கும் திறனுடையவர்களும் தேவையுடைய செயலை தேவையற்ற செயலாக இருக்குமோ என்று யோசிக்கத் தொடங்கி வருகின்றனர். 

பெரும்பாலானர்கள் மனதை பாழ்படுத்தி சிந்திக்கும் திறனை இழக்க வைத்து தேவையுடைய செயலை தேவையற்ற செயலாக எண்ண வைத்து விட்டனர்,              












பதிவு : J K பாலாஜி
நாள் : 20-Sep-16, 11:28 pm

மேலே