எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து! ​ தமிழன் என்று...

                     பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!   


 ​தமிழன் என்று சொல்லடா 
--தலை நிமிர்ந்து நில்லடா 
உள்ளத்தில் நிறைந்த ஒலியடா 
--​உயிரில் கலந்த வரிகளடா ! 


திருவிழாக்கள் நடக்கும் இல்லமும் 
--திருநாளாய் தித்திக்கும் இதயமும் 
திகட்டாத இனிப்பாய் இருந்திடும் 
__தினம்தினம் நினைவில் வந்திடும். 


அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு , 
என்னருமை எழுத்து நண்பர்களுக்கு , 

தைத் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்கள் 


தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . 

இன்பமே பொங்கி வழியட்டும் 
இல்லங்களிலும் , இதயங்களிலும் ! 

அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும் 
அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் ! 

குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும் 
கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் ! 

அநீதிகள் அகன்று நீதியே நிலைக்கட்டும் 
அகிலமே ஆனந்தத்தில் இனி மிதக்கட்டும் ! 

அனைவருக்கும் என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !!! 

பழனி குமார் 
சென்னை 
14.01.2016 ,

பதிவு : மலர்91
நாள் : 10-Jan-17, 1:21 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே