எண்ணம்
(Eluthu Ennam)
வாசக உலகத்தமிழ் அன்பர்களுக்கு
வளமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
பிரமனவன் னுலகத்தைத் தோற்றுவித்த திருநாளாம்
பிரதான சித்திரையே யாகும்..!
அம்பிகை அவதரித்ததும் சித்திரைத் திங்கள்
இந்திரனின் குழந்தையும் சித்திரையே..!
அவதாரம் பலயதில் உயிரின மூலமாம்
மச்சாவதாரம் தோன்றிய மாதம்
வாழும் கணக்கறிந்த சித்ரகுப்தனை வாழ்த்தி
வணங்கும் சித்திரை முதல்நாள்..!
சித்தபுருஷர் பலரவதரித்த திருநாளைக் கொண்டாடும்
சித்திரை திங்களெனும் முதல்நாள்..!
பஞ்சாங்கம் படித்து வரும் நற்பலனை அறியும்
பாரம்பரியத் திருநாளே சித்திரை..
சித்திரயை முதலெனவும் பல்குனியைக் கடையென்றும்
சித்தநாடி குறி சொல்லும்..!
புண்ணிய மாதமாம் சித்திரையில் விரதமிருக்க
எண்ணிய தெல்லாம் நிறைவேறும்..!
இளவேனிற் காலம்தான் வசந்தமெனப் பிறந்து
வந்தது தான் சித்திரை..!
இனிப்பும் கசப்பும் கலந்ததே வாழ்வென
வேம்பும் மாவும் பூத்துக்குலுங்கும்..!
சித்திரைப்பூ மலர்கிறாள் செந்தமிழில் சிரிக்கிறாள்
நித்திரைகலைய விழித்திடுவீர் வாழ்த்துச்சொல்ல..!
சித்திரையின் முதல்நாளிலெம் சிந்தை மகிழ
பக்தியா லுனை வாழ்த்துகிறோம்..!
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி
================
வல்லமை மின் இதழ் வெளியீட்டின் மறுபதிவு
பொங்கல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
--தலை நிமிர்ந்து நில்லடா
உள்ளத்தில் நிறைந்த ஒலியடா
--உயிரில் கலந்த வரிகளடா !
திருவிழாக்கள் நடக்கும் இல்லமும்
--திருநாளாய் தித்திக்கும் இதயமும்
திகட்டாத இனிப்பாய் இருந்திடும்
__தினம்தினம் நினைவில் வந்திடும்.
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு ,
என்னருமை எழுத்து நண்பர்களுக்கு ,
தைத் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்கள்
தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
இன்பமே பொங்கி வழியட்டும்
இல்லங்களிலும் , இதயங்களிலும் !
அல்லல் நீங்கி மகிழ்ச்சி பெருகட்டும்
அன்பு நிறைந்து அகங்கள் மகிழட்டும் !
குறைகள் மறைந்து குதூகலம் கூடட்டும்
கவலைகள் நீங்கி களிப்புடன் வாழட்டும் !
அநீதிகள் அகன்று நீதியே நிலைக்கட்டும்
அகிலமே ஆனந்தத்தில் இனி மிதக்கட்டும் !
அனைவருக்கும் என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !!!
பழனி குமார்
சென்னை
14.01.2016 ,