எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​ அனுபவத்தின் குரல் - 59 ************************** நாம்...


​ அனுபவத்தின் குரல் - 59 

**************************

நாம் ஒருவருக்கு உதவி செய்ய நினைத்து அவரின் குறையை கேட்டறிந்து அல்லது எவரேனும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நம்மை அணுகும் போது நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய நினைத்து அவருக்கு சாதகமாக பதிலளித்து செய்வதாக வாக்குறுதி அளிப்போம். ஆனால் சில நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக  இயலாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. இது எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகள் தான் என்றாலும் அந்த தருணங்களில் நாம் உண்மையாக வருந்தினாலும் அதை நம்பாமல் இருப்பது யதார்த்த ஒன்றுதான். 


ஆயினும் சிலர் அதை புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் நாம் வேண்டும் என்றே செய்ததாக நினைத்து உதவி செய்ய முன்வந்தவரை குறை கூறுவது நிகழ்வதும் உண்டு. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விரோதியாக மாற்றுவது ஜீரணிக்க முடியாத ஒன்று. உண்மை நிலை அறியாமல் பேசுவது மட்டுமன்றி நாம் திட்டமிட்டு செய்த சதி செயலாக நினைப்பவர்களும் உண்டு இந்த சமுதாயத்தில். 


அதுமட்டுமல்ல அவர்கள் இந்த ஒரு எதிர்பாராத நிகழ்வால் நாம் ஏற்கனவே அவருக்கு செய்த உதவிகளை மறந்து நம்மை கேலியாக பேசுவது அடுத்தவர்களிடம் கேவலமான முறையில் தமது எண்ணத்தை செயலை சித்தரிக்கும் வழக்கம் உண்டு. அதைத்தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. 


இதனால் உறவுகள் மற்றும் நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் நிரந்தர இடைவெளி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

இந்த காலத்தில் தேர்தல் பிரசாரம் போது அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை அள்ளி ஓட்டும் பெற்று ஜெயித்து பதவிக்கும் வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விடுபவர்களை மக்கள் உடனே மறந்து போகும் நிலை தான் இன்று. ஆனால் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் நாம் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாத நிலையில் நம்மை எதிரிகளாக நினைப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. 


வாக்குறுதியை அளிப்பது பின்னர் வருந்துவதும் இனி எதற்கு என்று நான் பவநேரங்களில் நினைப்பதுண்டு. எல்லாம் அனுபவத்தின் காரணமாக பதிவிட விரும்பினேன். 


  பழனி குமார்                 

நாள் : 29-Dec-17, 7:17 am

மேலே