எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 60 **********************************​ நண்பர்கள் உருவாகுவது...

  அனுபவத்தின் குரல் - 60
**********************************​


நண்பர்கள் உருவாகுவது பொதுவாக எதேச்சையாக இருக்கலாம் . சிலரை நாம் ஏதாவது ஒரு நிகழ்வில் சந்திப்பதன் மூலமும் , ஒருசிலர் நாம் பழகும் விதத்தாலும் ​, மற்றும் சிலர் நமக்கு தெரிந்தவர்கள் மூலம் அறிமுகம் செய்து வைப்பதன் மூலமும் , ஒன்று சேர்ந்த படித்ததன் காரணமாகவும் , ஒன்றாக பயணம் செய்வதன் மூலமாகவும் அல்லது ஒரே இடத்தில் பணி புரிவதன் மூலமாகவும் இருக்கலாம் . இவை யாவும் இயற்கையாக நடப்பவை . ஒரு சில எதிர்பாராமல் நிகழ்பவை . உலகில் பொதுவான ஒன்று . ஆனாலும் நட்பு நிலைத்திருப்பது என்பது மிக சிலரிடம் மட்டுமே .


ஆனால் இந்த விஞ்ஞான காலத்தில் சமூக வலைத்தளங்கள் முகமே அறியாமல் , முகவரியும் தெரியாமல் , சந்திப்பும் நிகழாமல் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நண்பர்கள் ஆவதை நாம் கண்கூடாக காண்கிறோம் . நமக்கே அது போன்ற நட்புகள் கிடைப்பதை மறுக்க முடியாது . அவை நிரந்தரமா என்று கூட தெரியாது . எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் தெரியாது . ஆனாலும் நட்பின் மகத்துவத்தை , பயனை , புரிதலை நாம் அனைவருமே நன்றாக அறிந்தவர்களே .ஆழ்ந்த நட்பு ஒரு போதும் அழியாது . புரிந்த நட்பு என்றும் பிரியாது . இதயத்தால் இணைந்த என்றுமே இருகூறாகாது . உள்ளத்தால் ஈர்த்து , உணர்வுடன் சேர்ந்த நட்பில் என்றும் விரிசல் ஏற்படாது . நெடுங்காலம் பழகிய நண்பர்கள் நெடுந்தூரம் தள்ளி சென்றாலும் இருவருக்கும் இடையே உள்ள நட்பின் அளவு ஒரு துளியளவும் இடைவெளி இருந்திட வாய்ப்பே இல்லை . இதனை புரிந்தவர் எவரும் ஆதரிப்பர் , ஆமோதிப்பர் என்று நம்புகிறேன் .


நிரந்தரமிலா வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்திடும் நாம் என்றும் நண்பர்களாக இருப்போம் . நட்பிற்கு மதிப்பளித்து , உண்மையாக வாழ்வது அனைவருக்கும் நற்பயனை அளிக்கும் என்பதில் மாற்று எண்ணமின்றி ஒப்புக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் . 


மனித வாழ்வின் ஒப்பற்ற உறவு நண்பர்களாய் மாறுவதும் இருப்பதும் நீடிப்பதும் என்பது எனது அனுபவத்தின் குரலாக ஒலிக்கிறேன் .


பழனி குமார்  

நாள் : 29-Dec-17, 3:48 pm

மேலே