எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புத்தாண்டை வளமாக்க.. புதிய சூரியனாக வருக.! ஞாயிறு, December...

புத்தாண்டை வளமாக்க..
புதிய சூரியனாக வருக.!

ஞாயிறு, December 31, 2017 


வாரத்தின் மாதத்தின் வருடத்தின் கடைசிநாளாக..
 ..........வந்தஞாயிறே வரும்நாளில் இருள்நீக்க வருவாய்.!

வாரநாளின் கடைசியில் கனியுமின்பக் களிப்பில்..
..........வழியனுப்புகிறோம்!...உன்னை வந்தனை செய்தே.!

ஊரவர் விழிக்குமுன் உதிக்கின்ற பேரொளியுடன்..
..........உதயமாகும் புத்தாண்டில் புதிதாய்த் தோன்றுவாய்.!

பேரவாகொண் டெதிர்நோக்கும் புதிய ஆண்டில்..
..........பெறும் முயற்ச்சியனைத்தும் வெற்றிகாண வழிசெய்.!

பாரம்பரியம் நிலைக்கவும் பழைய கலாச்சாரமும்..
..........பண்பாடும்வளர பாரதத்தின் பெருமை சொல்ல-வா.!

கோரத்தின் பிடியிலிருந்து புவியுலகம் தப்பிக்க-தீய..
..........கோள்களின் சக்தியைநீ மாற்றவும் ஏதுசெய்வாய்.!

சீரழிக்கும் இயற்கைப் பேரிடரே இல்லாதுசெய்.!
..........சிந்தனையில் தீயதையெரித்து நல்லதை எழச்செய்.!

ஓரவஞ்சனை இல்லாத உணர்வை இனிவளர்க்க..
..........ஒர்நல்ல யோசனையை உலகத்தாருக்கு உணர்த்து.!

காரணமறியாது மனம் போனபோக்கில் திரியுமதில்..
..........கடமையென்கிற எண்ணம் உதிக்க வழிசெய்வாய்.!

ஆரஞ்சோதியாய் தவழும் விண் மீனுக்கெல்லாம்..
..........அருமைத் தலைவனே!...அன்புதழைக்க வழிசொல்.!

பூரண திருப்தியோடு புத்தாண்டில் நுழையும்நீயே..
..........பொங்கும் நல்லெண்ணம் மேலோங்க உதவிசெய்.!

         

நாள் : 31-Dec-17, 12:33 pm

மேலே