எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புல்வாமா புரிதல்....! உறையும் குளிரில் கம்பீரமாய் கனலேந்தி நின்றாயே...!...

புல்வாமா புரிதல்....!
உறையும் குளிரில் கம்பீரமாய் 
கனலேந்தி நின்றாயே...!
நாட்டைக் காக்க நாள்தோறும் 
எல்லையில் எதிரிகளை வென்றாயே...!
வேட்டைக்காரனாய் 
எம் தாயகத்தை காத்தாயே....!

நாட்டைக் காக்க 
இராணுவம் சென்றாய்...!
 
தன் வீட்டை மறந்து உயிர்த் 
தியாகம் செய்தாய்...!

எல்லையில் வராத எரிபொருள் உன் திண்ணையில் வைத்தது யார் என்று நீயே அறிவாய்...!

அழிக்கமுடியாத இந்த அழிவுக்கு 
முடிச்சு போட்டவன் யாரோ....!

இதுதான் பழிவாங்கும் 
புல்வாமா போரோ...!

சதிகாரன் அங்கு யாரோ....!

சமர்ப்பிப்பவன் இங்கு வேறொ!

எம் உயிர் காக்க சென்றவனே....!
எம் இதயத்தை வென்றவனே,...!
எம் நாட்டின் நாயகனே...!
உன் உயிர் துடிக்க கொன்றவனே...!
பழி தீர்ப்பவன் அந்த 
இறைவன் ஒருவனே....!
Create by ✍️ thamim ✍️...💔

நாள் : 10-Apr-20, 12:46 pm

மேலே