எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைப்பு: மனிதம்.... மனிதம் யாரடா இங்கு புனிதம்...! மனிதனாக...

தலைப்பு: மனிதம்....

மனிதம் யாரடா இங்கு புனிதம்...!

மனிதனாக பிறந்ததே பெரும் துயரம்..!

நான் கண்ட ஒருவர் மனதில் 
கூட இல்லையடா இங்கு துரிதம்...!

பாதியில் முடியும் இந்த அற்ப 
வாழ்க்கைக்கு ஏனடா பாசிசம்...!

தற்காப்புக்கு தாப்பால் 
போட்டால் பயங்கரவாதம்...!

தடியெடுத்து அடிப்பவன் 
பெயரோ இங்கு பரிதாபம்...!

கொரோணாவிற்கு 
இல்லையடா மருத்துவம்....!

கொடிய விஷம் கொண்ட மனிதனே
நீயல்லவா கொரோணாவை விட பயங்கரம்....!

சதியும் ஒருநாள் விழித்தெழும்...!

மதத்தினால் மயங்கிக் கிடக்கும் மனிதனின் மனமும் ஓர் நாள் உயிர்த்தெழும்....!

சாந்த குணமும் ஒருநாள் 
கொதித்தெழும்..!

மக்களை பிரித்தாளும் 
மதி கெட்ட அரசும் ஓர் நாள் சரிந்து விழும்...!
Create by ✍️ thamim ✍️

நாள் : 10-Apr-20, 12:41 pm

மேலே