எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீர்வு இல்லா நோய் வந்தாலும்..! தீர்வு இல்லா வறுமை...

தீர்வு இல்லா நோய் வந்தாலும்..!
தீர்வு இல்லா வறுமை வந்தாலும்..!
திணறடிக்கும் பசி வந்தாலும்..!
மாறாத மதவெறி...!
மலருமா இந்தப் 
பூவுலகில் நன்னெறி..!

உணர்வுக்காக உயிரை 
இழக்கும் மனிதம்..!

அவரவர் கடவுள்கள் 
அவரவர்களுக்கு புனிதம்...!

வளையும் நாவினால் 
வலைதளத்தில் வேண்டாமே விமர்சனம்..! 

மதத்தின் பின்னால் 
சவக்கிடங்காய் சாம்பலை 
ருசிக்கும்  இவ்வுலகம்...!

மிஞ்சி இருக்கும் நாட்களை
நல்வழியில் கழித்து விடு 
இந்த உலகம் ஒரு நாடகம்....!


ஆறறிவு கொண்ட மனிதா 
தட்டி எழுப்பு உன் ஏழாம் அறிவை...!

அடித்து விரட்டு மதவெறி யின் அழிவை...!

மதவெறி மாறுவது எப்பொழுதோ..!
மன நிம்மதி‌யும் அப்பொழுதே...!

உருவாக்கம்.. தமீம்......✍️

நாள் : 30-Apr-20, 6:56 pm

மேலே