எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தன்னம்பிக்கையின் கட்டுரை....! வாழ்க்கையில் தொற்றவன் மீண்டும் எழுந்து வந்த...

தன்னம்பிக்கையின் கட்டுரை....!

வாழ்க்கையில் தொற்றவன் மீண்டும் எழுந்து வந்த கதை....!

அனாதையாக பிறந்த அந்த இளைஞன்
தன்னுடைய 25 வயதுவரை பார்க்காத துன்பங்கள் இல்லை...!

வாழ்க்கையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அந்த இளைஞன் ஒரு முடிவு எடுத்தான்...

பசி வறுமை வாழ்வாதார கொடுமை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க
முடிவெடுத்தான் அந்த இளைஞன்...

ஆம்... தற்கொலை செய்ய ஒரு பெரிய மலை உச்சிக்கு சென்றான்...

அந்த மலை உச்சியில் நின்று கொண்டு
கீழ் நோக்கி பார்த்தான் ஒரு கல் உருண்டு ஒடியது. அதை கண்டு கொலைநடுங்கி போனான்...

பிறகு சற்று கீழே அமர்ந்து இந்த உலகை இறுதியாக கண்டு ரசித்தான் அந்த இளைஞன்...

அவன் அருகில் இரு புறாக்கள் அமர்ந்து சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன...

அந்த இரு புறாக்களை உற்று நோக்கினால்
அந்த இரு புறாக்களின் சந்தோஷத்தை கண்டு இவன் உள்ளில் ஒரு கேள்வி எழுகிறது...

இவைகளுக்கு எல்லாம் உணவளிப்பது யார்?
5 அறிவு கொண்ட இந்த புறாக்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதே..
ஏன் ?நானும் இவைகளை போன்று இந்த உலகில் சந்தோஷமாக வாழக்கூடாது என்று முடிவெடுத்தான்....

மலை அடிவாரத்தில் இருந்து இறங்கி நடந்து சென்றான்...

செல்லும் வழியில் ஒரு வயதான பெரியவர் ரோட்டில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்று கேட்டான் ஐயா ஏன் நீண்ட நேரம் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டான் அந்த இளைஞன்...

அந்த பெரியவர் சொன்னார்..
நான் சாலையைக் கடந்து அங்கு உள்ள மருத்து கடைக்கு செல்ல வேண்டும்...

இளைஞன்: சரி ஐயா உங்களை நான் கூட்டி செல்கிறேன் வாருங்கள்..
கைத்தாங்கலாக கூட்டிச் சென்று மருந்தைப் பெற்றுக் கொடுத்தான் அந்த இளைஞன்...
வரும் வழியில் அந்த பெரியவரிடம் உரையாற்றி கொண்டு வருகிறான் அந்த இளைஞன்...

அந்த பெரியவரிடம் கேட்டான் ஐயா நீங்கள் ஏன் இந்த தள்ளாடும் வயதில் தனியாக வருகிறீர்கள் உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா...

பெரியவர்: சொன்னார் பிள்ளைகள் இருந்தார்கள் என் சொத்துக்களை பெறும் வரை.. என்று சிரித்த முகத்துடன் அந்த பெரியவர் சொன்னார்....

இளைஞன்: சரி ஐயா இங்கு ஒரு அரண்மனை வெளியே கூடாரம் இருக்கிறது இங்கு அமர்ந்து விட்டு செல்லுங்கள்...

பெரியவர்: நேரடியாக அந்த அரண்மனைக்குள் சென்றார்..

இளைஞன்: ஐயா இருங்கள் ஏன் அரண்மனைக்குள் செல்கிறீர்கள் காவலாளி கண்டால் திட்டுவார்கள்..

பெரியவர்: சரி தம்பி உன் வீடு எங்கே இருக்கிறது..

இளைஞன்: எனக்கு வீடு 
ஒன்றும் இல்லை ஐயா...

பெரியவர்: சரி உள்ளே வா தம்பி இது என் வீடுதான்....

இளைஞன்: ஆச்சரியத்துடன் உள்ளே சென்றான்..

அரண்மனை வாயிலில் காவலாளி கதவை திறந்து விட்டார் ஓட்டுநர்களும் வேலை ஆட்களும் ஓடோடி வந்து பெரியவரிடம் வணக்கம் சொல்வதைப் பார்த்து பூரித்து போனால் அந்த இளைஞன்....

இளைஞன்: ஐயா இத்தனை வேலை ஆட்கள் இருக்கிறார்கள் இருந்தும் நீங்கள் ஏன் மருந்து கடைக்கு நடந்து சென்று மருந்தைப் வாங்கி வருகிறீர்கள்...

பெரியவர்: சிரித்தபடி சொன்னார் நான் பெற்ற பிள்ளைகள் என் சொத்துக்காக பல முறை மருந்தில் விஷம் கலந்தும் என்னைப் கொள்ள பார்த்தனர்..
அவர்களை கொலைகாரர்களாக்க நான் விரும்ப வில்லை அதான் என் கடைசி மூக்கு கண்ணாடி வரை அவர்களிடம் கொடுத்து வழி அனுப்பி விட்டேன்...!

இளைஞன்: சரி ஐயா இவர்கள் உங்கள் வேலை ஆட்கள் தானே இவர்களிடம் வாங்கி வரச் சொல்லாமே...!

பெரியவர்: இவர்களையும் நான் கொலைகாரர்களாக்க விரும்ப வில்லை தம்பி என்று சிரித்த படியே வா தம்பி உள்ளே செல்லலாம்...!

இளைஞன்: தலையை சொரிந்து படி
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்...!

பெரியவர்:‌ ம் கேள் தம்பி..

இளைஞன்: நீங்கள் தான் உங்கள் கடைசி மூக்கு கண்ணாடி வரை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டீர்களே...
பிறகு எப்படி இந்த அரண்மனை வாழ்க்கை...!

பெரியவர்: ஆம் தம்பி அவர்கள் என்னை நடு ரோட்டில் விட்டு சென்றாலும்..
என் மன வலிமை என்னிடம் சொன்னது நான் இருக்கிறேன் என்று.... என்னுடைய
அறுபது ஆண்டுகள் கழிந்து சென்றாலும் மீண்டும் பிறந்தேழுந்தென்... மனதளவில் 25வயது வாலிபனாக...

என் வாழ்க்கையை கட்டுரையாக எழுதினேன் என் கட்டுரை 
திரைக்கதையாக மாறியது...
என் திரைக்கதை திரையில் படமாக வெளிவந்தது... என் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் எனக்கு பரிசாய் தந்தார் இந்த அரண்மனையை...!

இளைஞன்: என்ன ஐயா சொல்றீங்க வாழ்க்கையை திரைக்கதையாக ‌எழுதி
இவ்வளவு பெரிய அரண்மனையை பெற்றுள்ளீர்களா.... நம்ப முடியவில்லையே

பெரியவர்: என் திரைக்கதையை இந்த உலகிற்கு சொன்ன அந்த இயக்குனர் நிறைய அரண்மனையை பெற்ற பின்பு தான் தம்பி எனக்கு இந்த அரண்மனையை லஞ்சமாக தந்தார்... என் கதையை நான் யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்காக.....!

இளைஞன்: பிறகு ஏன் ஐயா என்னிடம் சொன்னீர்...!

பெரியவர்:  நீ அந்த மலை உச்சியில் இருந்து இறங்கி வந்ததை பார்தேன் தம்பி...!

இளைஞன்: குழப்பத்துடன் சரி ஐயா நான் வருகிறேன் என்றான்...!

பெரியவர்: சரி தம்பி நான் உன்னிடம் நான் ஒன்று சொல்லட்டுமா...

இளைஞன்: சொல்லுங்கள் ஐயா...

கடைசியாக அந்த பெரியவர் சொன்னார்
தம்பி என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை தொடங்கும் போது எனக்கு அறுபது வயது... என்று சொல்லி விட்டு சென்றார்.....!

அந்த பெரியவர் சொன்னதை ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞன் உட்கார்ந்து யோசித்தான்....!

பெரியவர் சொன்ன வார்த்தை அவன் மனதில் ஆழமாக பதிந்தது...

தன் பிள்ளைகள் அந்த பெரியவரை நடு வீதியில் விட்டு சென்றாலும் அவருடைய தன்னம்பிக்கை விடாமுயற்சி மீண்டும் அவரை அரண்மனைக்கு சொந்தக்காரர் ஆக மாற்றியது....!

நான் 25வயதில் வாழ்க்கையை இழக்க துணிந்தேனே....

என்று அவன் ஆழ் மனதில் சொல்லியபடி அவன் வாழ்க்கையின் உயர்வை தேடி சென்றான்....!

போராடினான் போராடினான் 
இந்த உலகமே உற்று நோக்கும் 
அதிபதியானன்...!

வாழ்க்கையை வெறுத்து
உயிரை மாய்த்துக்கொள்ள சென்றவனை மாற்றியது அந்த பெரியவரின் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தை....!

இதில் இருந்து என்ன புரிகிறது....!

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் தளரும்பொழுது அந்தப் பெரியவரை போன்று தன்னம்பிக்கை கொடுங்கள்...!

உங்களைச் சுற்றி உள்ளவர்கள் வருடும் பொழுது அந்த புறாக்களைப் போன்று அவர்கள் மனதை 
புத்துணர்ச்சியாக்குங்கள்....!

வாழ்க்கையின் கதைகள்....!
உருவாக்கம் உங்கள் நண்பன்....✍️ தமீம் ✍️

நாள் : 30-Apr-20, 6:57 pm

மேலே