எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த " கொரோனா " தொற்றால் பொதுவாக மக்களுக்கு...

இந்த " கொரோனா " தொற்றால் பொதுவாக மக்களுக்கு பலவித பாதகங்களை ஏற்படுத்தி
அல்லல்பட வைக்கிறது . மக்களின் வாழ்வாதாரம் சரிந்து , நாளைய நிலைபற்றி
கவலையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .அனைவரும் எந்நேரமும் அச்சத்தில் முழ்கி , நாளும் வீட்டில் முடங்க நேரிட்டாலும் ,அது சில பாடங்களைபோதிக்கிறது என்பது
மறுக்க முடியாத உண்மை.


1. சுற்றுச் சூழலையும் வசிக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் .

2. நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை எளியோரின் நிலைப்பற்றி அரசுகளை சிந்திக்க வைத்தது .

3. ஒருவேளை உணவிற்காக நாளும் உழைத்து பசியாறும் வறுமையில் வாடுபவர் பற்றி அனைவரையும் நினைக்க வைத்தது .

4. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் நிலையையும் அவர்களின் சிறப்பான பணியையும் அறிய செய்தது .

5. மருத்துவமனைகளின் மேம்பாடு மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையை உணர
வைத்தது .

6. சாலைகளிலும் வீதிகளிலும் தேவையின்றி கூடும் மக்களை ( தற்போது மட்டும் ) தடை செய்தது .

7. பல லட்சங்கள் செலவு செய்து ,பலரையும் வரவழைத்து மண்டபங்களில் திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடத்தி , அதிகளவு உணவையும் செய்து அதில் சரிபாதி வீணாக்கும்
நடைமுறைக்கும் தடை விதித்து செலவீனங்களை தவிர்க்க வைத்தது .

8. அதுமட்டுமன்றி சாதிமத எண்ணங்கள் மறைந்து எல்லோரும் எல்லோருக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனைத் தோன்றியது .

9. ஒவ்வொரு மனிதனுக்கும் சிக்கனத்தின் அருமையை நிச்சயம் உணர்த்திடும் .

10. இளைய தலைமுறைக்கு இவை பாடங்கள் மட்டுமல்ல , வருங்கால வளமான வாழ்விற்கு
வழிமுறை என்பதை சிந்திக்கும் காலமாக அமைந்திருக்கிறது .மேற்கூறிய அனைத்தும் அனைவருக்கும் பாடங்களாக இருந்தாலும் , இதேநிலை நீடித்தால் சமுதாயம் ஒரு மோசமான, வருந்தத்தக்க நிலையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை . ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று, மறுக்கவில்லை நான் .


நல்லதே நடக்கட்டும் , நாடும் வீடும் செழிக்கட்டும் . தலைமுறை தழைக்கட்டும் .


பழனி குமார்
01.05.2020  

நாள் : 3-May-20, 7:39 am

மேலே