எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவள் கண்ணெதிரே அமர்ந்திருக்க அவள் வெட்கத்தில் அமைதி காக்க......

என்னவள் கண்ணெதிரே அமர்ந்திருக்க அவள் வெட்கத்தில் அமைதி காக்க...
எனது கண்களோ....
அவளது புருவத்தின் புரிதலை உணர்ந்து கண்களின் கருவிழியை கண்டு மயில் தோகையின் இரு சிறகுகள் என்றது....
அவளது வெட்கத்தின் ரேகையில் உருவான முகச்சுருக்கங்களின் நுணுக்கங்களை எங்கும் கண்டதில்லை என்றது 

" நாளை மலர விருக்கும் ரோஜா மொட்டினை தவிர "

லேசான தென்றலிலும் மறந்துவிடக்கூடாது என்று இளந்தளிர் போன்ற காதுகளை சுற்றி கைது செய்வது போல் அவள் கூந்தல் முடிகள்.....
மௌனத்தின் மொழிகளை அழகாய் பேசிக்கொண்டிருக்கும் செவ்விதழ்களும், அதன் சுருக்கங்களும் இரு கன்னங்களில் மையப் புள்ளியாய் கூடும் அழகு என்னவென்பது....
என்று இதுவல்ல வே போதும் தான் வாழ என்றது.
                                  - என் கண்கள்

பதிவு : MD
நாள் : 1-Nov-21, 11:16 pm

மேலே