எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோள் கொடு ஏற்றங்கள் வேண்டி நின்றேன் ஏளன சிரிப்பினை...

தோள் கொடு

ஏற்றங்கள் வேண்டி நின்றேன்
ஏளன சிரிப்பினை நீ
கொடுத்தாய்.......

மாற்றங்கள் வேண்டும் என்றேன்
மதி கெட்ட பைத்தியம்
என்றழைத்தாய்.........

ஜாதிகள் எதிர்த்து நின்றேன்
நீயோ என் ஜாதகம்
தேடுகின்றாய்.......

பேதத்தை வேண்டாம் என்றேன்
நீ என் தேகத்தை அழிக்க
வந்தாய்............

ஏழைக்கு உதவ சென்றேன்
நீ என்னை எட்டித்தான்
உதைத்துவிட்டாய்

அரசியல் ஒழிக என்றேன்
என் கையை விலங்கிட்டு
அடைத்துவிட்டாய்.......

தனிமையில் யோசித்து நான் கிடந்தேன்
முடிவாய் உன் கையை யாசித்து
வந்து விட்டேன்.........

ஓர் குரல் கேட்கவில்லை இங்கே
தோள் கொடு ஒன்றாக
கேட்டிடலாம்........

மாற்றங்கள் காணும் வரை
சேர்ந்திரு அவரையும்
மனிதராய் மாற்றிடலாம்.........

நாள் : 2-Jun-14, 3:42 pm

மேலே