எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விறகுகள் உடைகின்ற போதும் கலங்காதே, நாம் விறகுகள் தோழா.............

விறகுகள்

உடைகின்ற போதும்
கலங்காதே, நாம் விறகுகள் தோழா..........
வீழ்ந்தால் கூட அடுப்பெரியும்
நாளை பலர் வீட்டினில் தான் வா..........

அர்த்தமற்ற
சட்டங்கள் ஒழிந்திட
புது விதி பிறந்திட
எழுந்து நீ வா வா ................

மாற்றங்கள் பிறந்திடும்
இப்போதே நடந்திடும்
கோடாரிகள் கூட இரண்டாக
பிளந்திடும் சேர்ந்து நில் தோழா........

உடைத்தெறிவோம் அல்லது
உடைந்து தெறிவோம்
துணிந்து நில் தோழா..........

ஒற்றுமை பட்டால் உண்டு ஓர்
வாழ்வு பிரிந்து நீ நின்றால்
அது நம்முடைய வீழ்வு ..........

காந்தி போல் சேர்ந்து கேட்டிடுவோம்
இல்லையேல் இல்லையேல்
விதிகளை குப்பையில் போட்டு
சாய்திடுவோம்...................

நாள் : 2-Jun-14, 4:26 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே