எது நடந்தாலும் நமக்கு என்ன என்று தான் நாம்...
எது நடந்தாலும் நமக்கு என்ன என்று தான் நாம் போய்கொண்டு இருக்கிறோம்...
பக்கத்து வீட்டில் கொலை நடந்தால் என்ன? பலாத்காரம் நடந்தால் என்ன? திருட்டு நடந்தால் என்ன? அவர்கள் நம்மை உதவிக்கு அழைத்தால் கூட, ஏன் நமக்கு வம்பு என்று நாம் நம் வீட்டு கதவை நன்றாக சாத்திவிட்டு தொலைகாட்சியில் ஒலி அளவை அதிகமாக்கி விருப்பமான பாடல் கேட்போம்...
அப்படி ஒரு சம்பவம் நடந்தால் பாதிக்கபட்டவர்களுக்காக அந்த தெருவாசிகள் கூட உதவி செய்வது இல்லை... உதவி செய்வதை விட ஒரு அரவணைப்பு கூட இல்லை... கேலி பேச, நல்ல வேணும் என்று நினைக்க மட்டுமே செய்கிறார்கள்...
சில குடியிருப்புகள் ஏதோ ஒரு பெயரில் நகர் என்று வைத்து, அந்த நகர்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அங்க உள்ள எல்லாரிடமும் நன்கொடை என்று வசூல் செய்து,
மரம் நட்டோம்,காவலுக்கு ஆள் போட்டோம்,இன்னும் பல நம் நகருக்காக திட்டம் வைத்துள்ளோம், ஒவ்வொன்றாக செய்வோம் என்று சொல்லும் அமைப்பு கூட எங்கோ காணமல் ஒளிந்து விடுகிறது...
எழுத்துகளில் மட்டுமே வீறுக்கொள்கிறது... சில நேர வாதங்களில் முடிந்துவிடுகிறது...