சாத்தானின் அம்மா மனிதன் தினம்- என்று ஒன்று உருவாக்கு...
சாத்தானின் அம்மா
மனிதன் தினம்- என்று
ஒன்று உருவாக்கு
அன்றொரு நாளாவது
மனிதனாக நீஇருந்து வாழு.
நீயே தொலைத்து விட்டு
தொலைதூரம் ஓடுகிறாய்
வெகுதூரம் ஓடி கிடைக்காமல்
வெறிகொண்டு ஆடுகிறாய்
அச்சரத்தில் அ-வும்
அகிலத்தில் இறையும்
முதல்வனாக அங்கீகரித்தாய்
மனிதனாக இருக்க மட்டும்
ஏன் மறந்து போனாய்
இனிமேலும் இங்கு பிறந்துவர
எக்கண்ணரும் விரும்பார் .
எந்தகர்த்தர் உனக்காகஇனி
பாவசிலுவை சுமப்பார்
அல்லாவையும் கூப்பிடு
அவரும் மறுப்பார்
மதயானை தோற்குமளவு
மதத்தோடு சண்டை படைக்கிறாய்
மண்ணுக்கும் பெண்ணுக்கும்
சொந்தங்களின் மண்டை உடைக்கிறாய்
பச்சையங்களை வெட்டிவிட்டு
வெப்பசலனத்தில் ஓடிச் சாகிறாய்
பாவங்கள் மட்டும் செய்து
பிராயச்சித்தம் தேடிப் போகிறாய்
தொலைநோக்கு இல்லாமல்
கொலைநோக்கில் நடக்கிறாய்
சோறூட்டும் கழனிக் காட்டை
அளந்து போட்டு விற்கிறாய்
நீ சாத்தான்-
சாகத்தான் வேண்டும்
அப்பத்தான் சரித்திரங்கள்
அழுக்குகளைத் துடைக்க முடியும்
நீ மாற்றான்
மறையத்தான் வேண்டும்
அப்பத்தான் தளங்கள்
அழுக்குநீரை கழுவ முடியும்.
கருவிலே நீ இறந்திருந்தால் நான்
காணாமல் போயிருப்பேன்
உருவமின்றி பிறந்திருந்தால் ஒரு
கண்ணீரோடு மறந்திருப்பேன்
கருவறை தாண்டி பிறந்து
கயமைகளில் வீடுகட்டி மூழ்குகிறாய்
கருணை ஒன்றை மறந்து
கசடுகளில் கூடுகட்டி வாழ்கிறாய்
உனக்கு அமுதுதந்த என் மார்பறுத்து
நானொடிந்து போகிறேன்
உன்னைச் சுமந்துபெற்ற வயிரறுத்து
நான்மடிந்து போகிறேன்
கவி கொண்டு திட்டியும்
நீ கண்டு கொள்ளவில்லை
கோடரி தூக்கிவிட்டேன் இனி
உனக்கு மன்னிப்பில்லை ........
சுசீந்திரன். .