" மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு "என்று சொல்லி...
" மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு "என்று சொல்லி
நம் கேட்டை பாதியாய் பகிர்நது கொள்கிறதே அரசாங்கம் !!
என எண்ணும் குடிகாரனே..!
நீ குடிப்பதால் நாட்டுக்கு என்ன கேடு ?
நல்ல வருமானம்தான்.
நீ குடிக்க குடிக்க நாடு நன்றாய் இருக்கும்.
நீதான் நாசமாய் போவாய்...
அரசு உன்னை குடிக்கவைக்க அத்தனை வசதிகளும் தரும்.
உன் மனைவியின் தாலிக்கு வட்டியில்லா கடன் தரும்.
வாங்கி குடி.
உன் மனைவிக்கு தாலி மீடகும் அவசியம் இல்லாமல் போய்விடும்.
அதுவரை குடி.