தியாகம் மரகத இசைக்காக மூங்கில்கள் தற்கொலை செய்து கொண்டன...
தியாகம்
மரகத இசைக்காக
மூங்கில்கள்
தற்கொலை செய்து கொண்டன ....
பட்டு நூலுக்காய்
பட்டு பூச்சிகளும்
மரித்தன....
தானிறந்து
தன் தோலை
தவில் மேளத்திற்கு
கொடுத்தது மாடு ...
கர்வம் பிடித்த
மனிதனே
நீ -மட்டும்....
கர்மம் பிடித்தவனே
காணாமல் போ !.