கேள்விக்குறியின் கோரிக்கை

ஒரு படைப்பின் தலைப்பு வாசகனை கவர்ந்திழுக்கும் வகையிலும், அந்த படைப்பின் மையக்கருவின் தலையங்கமாகவும் விளங்குகிறது. அவ்வாறான தலைப்பில் ஆச்சரியக்குறி (!) கேள்விக்குறி (?) ஆகியவற்றை தளத்தில் பதிவு செய்யும்போது ஏற்றுக்கொள்வதில்லை.
இதுப்போன்ற குறிகள் இல்லாதபோது தலைப்பின் அர்த்தமே மாறிவிடுகிறது . தலைப்பிற்கு கேள்விகுறியும் ஆச்சரியக்குறியும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஆக எழுத்து தள நிர்வாகம் மற்ற சிறப்பு குறிகள் மற்றும் அடைப்பு குறிகளை அனுமதிக்க இயலாவிட்டாலும் , குறைந்தபட்சம் படைப்பின் தலைப்பிற்கு ஆச்சரியக்குறி, கேள்விக்குறி ஆகிய இரண்டு குறிகளை மட்டும் அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கிறேன்.