உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு, இதுப்போல் உங்களக்கு பிடித்த கண்ணதாசனின் பாடல் வரிகள் ,ஏதேனும் ஒன்றை கூறலாம் ?
![](https://eluthu.com/images/loading.gif)
கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள் தனக்கு வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட காரணமாயிற்று என்று கவிஞர் வாலி குறிப்பிட்டார்
அந்த பாடல் வரிகள் ...
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
இதே பாடலில் இந்த வரியையும் ரசிக்காமல் கடக்க முடியாது....
""வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.""
ஆம் அந்த பாடலின் முதல் வரிகள்...
மயக்கமா தயக்கமா....
இதுப்போல் உங்களக்கு பிடித்த கண்ணதாசனின் பாடல் வரிகள் ,ஏதேனும் ஒன்றை கூறலாம்
கண்ணதாசன் போன்ற உன்னத கவிஞர்களின் பிடித்த பாடல் என்று ஒரு பாடலையோ, ஒரு பாடலின் பாகத்தையோ குறிப்பிடுவது இலகுவான காரியம் அல்ல
எனினும் தாங்கள் அடிகடி பாடும் பாடல் எதாவத் கூறலாம்