தகவல் கிடைப்பதில்லை

எழுத்து தளத்திலிருந்து அனுப்படும் அறிவிப்புக்கள் , படைப்பில் கருத்துக்கள் பதிவாகினால் தெரிவிக்கப்படும் தகவல்கள் என ஏதும் எனது உறுப்பினர் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு வருவதில்லை .
( இது குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்து இருந்தேன் - மின் அஞ்சலில் spam folder லும் எழுத்து.காம் அறிவிப்புக்கள் ஏதும் வருவதில்லை. )

மேலும், எனது உறுப்பினர் கணக்கிலுள்ள தகவல் பகுதியிலும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் தகவல்கள் சரியாக வருவதில்லை.

-- > தகவல் வந்திருப்பதாக எண்ணிக்கை காட்டுகிறது. ஆனால் எந்த படைப்பிற்கு வந்திருக்கிறது என்று அறியமுடியாத அளவிற்கு சிரமம் இருக்கிறது.

--> சில தகவல்கள் மிகவும் காலதாமதமாக வருகிறது.

-- > சில நண்பர்கள் எனது எண்ணம் மற்றும் படைப்புக்கு கருத்து தெரிவித்து இருந்தாலும் அது தகவலாக வருவதில்லை.

--> சில நண்பர்களின் படைப்புக்கு நான் பதிவு செய்த கருத்திற்கு பதிவாகும் பதில் கருத்தும் தகவலாக தெரிவிப்பதில்லை. .

இதுப்போன்ற சிரமங்களை/ குறைப்பாடுகளை விரைவில் சரிசெய்து தருமாறு எழுத்து நிர்வாகத்திடம் கோரிககை வைக்கிறேன்.

நன்றி ..!-இரா.சந்தோஷ் குமார்நாள் : 1-Mar-15, 2:14 pm
0


மேலே