கணவன் - மனைவி வேறுபாடு - விவாகரத்து?

கணவன் ஒருவன் குடும்ப பிரெச்சனைகள் காரணமாக தன் மனைவி மற்றும் தனது ஒரு வயது குழந்தையை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

பஞ்சாயத்துகள் பல. பணம் தான் காரணம். நன்றாக நடந்த திருமணம் தான். கணவன் குடும்பத்தில் 4 பெண்பிள்ளைகள். பெற்றோர் பொறுப்பற்றவர். ஆயினும் 4 சகோதரிகளுக்கும் நல்ல வரன் பார்த்து கல்யாணம் முடித்தனர். அனைவரும் நன்கு செட்டில் தான். கடன் பாக்கிகள் பல.

மனைவி செல்வந்தினி சம்பளம் கணவனை விட உயர்வு. கல்யாணம் முடிந்தது. குடும்பத்திற்குள் சகோதரிகளின் ஊடுருவல், மாமனார் மாமியார் மகன் சம்பாத்தியம் முழுவதும் செலவு செய்யவே பார்க்கின்றனர். சேமிப்பு கிடையாது. சந்தோசமாக தான் சென்றது வாழ்க்கை. பெண் தனக்கு நேரும் எந்த பிரச்னையும் தன் அப்பா அம்மாவிடம் சொல்லாதது தான் வாழ்கை சந்தோசமாக செல்ல காரணம். அவள் அனைத்தையும் அவனுக்காக பொறுத்து கொண்டாள். கணவனை நல்ல வேலைக்கு செல்ல தூண்டினால். நல்ல வேலை பார்த்து கடன் எல்லாம் அடைத்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பது அவள் எண்ணம்.

குழந்தை உண்டானது. தொடங்கியது குழப்பம். 4 பெண்கள் பெற்ற மகராசி மாமியாருக்கு மருமகள் பெற்று தந்த பெண் பிள்ளை த்ரிப்திகரமாக இல்லை. சண்டை வெடித்தது.

மகன் யாருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று குழம்ப. நடுவில் 4 சகோதரிகளும் ஆட்டம் போடா. கணவன் மனைவிக்குள் பூகம்பம் வெடித்தது. அன்றும் அவள் அமைதி காத்தாள்.

அவனுக்கு நல்ல வேலை கிடைத்தது சந்தோசம். நல்ல சம்பளம் மிக சிறப்பு. மனைவி சரி இனி நான் சம்பாதிக்கும் அனைத்தும் நமது குழந்தைக்கே, நீங்கள் சம்பாதிப்பதை வைத்து நம் குடும்பம் நடத்தினால் போதுமானது என்றால் பொறுக்கவில்லை மற்றவர்களுக்கு, கணவனுக்கும் தான். சண்டையோ சண்டை.

(சொல்லமறந்ததை இங்கே குறிப்பிடுகிறேன் - அவள் ஒன்றும் தனக்கு என்று கேட்கவில்லை, சம்பளம் முழுவதையும் செலவு செய்வதில் தான் மாமனார், மாமியார் குறியாக இருந்தனர் தவிர கடனை அடைக்கும் எண்ணம் இல்லை. தன் பெண்பிள்ளைகளுக்கு மகன் மற்றும் மருமகள் சம்பாத்தியம் முழுவது சீர் என்று செய்ய ஆசைப்பட்டது தான் காரணம். அவள் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, கடன் வாங்கி செய்தல் தவறு 1000 ரூபாய் சீர் செய்தாலும் நீ மாமன் தான் லட்சம் ரூபாய் சீர் செய்தாலும் நீ மாமன் தான். முதலில் கடனை அடைப்போம். நமக்கு என்று ஒரு வீடு, நம் பிள்ளைக்கு என்று சிறு சேமிப்பு. நாம் நன்கு வசதியுடன் இருக்கும் போது நீங்கள் எது வேண்டும் என்றாலும் செய்யலாம். அனால் கடன்களை வாங்கி பேர் சம்பாதிப்பது தவறு என்று தான் அந்த பெண் நம் குடும்பத்திற்கு சேமிக்க போகிறேன் என்றாள்)

காசு பணம் தான் நீ எதிர்பார்கிறாய் உன் குடும்பமும் அதை தான் எதிர் பார்க்கின்றனர். என் கடனை அடைத்து விட்டு நான் உங்களிடம் வருகிறேன். என்று பொது சபையில் சண்டை போட்டு விட்டு சென்று விட்டான்.

அவள் அவனுக்கு செய்யாத கால்ஸ் இல்லை, அவன் நண்பர்களிடம் கெஞ்சாத கெஞ்சல்கள் இல்லை. அவன் அலுவலகுத்திரு சென்றும் கூட பார்த்து விட்டால் முடியவில்லை. கை குழந்தையுடன் நாடு ரோட்டில் இன்று கூட அழைத்து பார்த்தால் வரவில்லை. அவளை அவன் எல்ல வகையிலும் பிளாக் செய்தான். பஞ்சாயத்து பேச அழைத்தாலும் வர மறுத்தான். அழுகாத நாள் இல்லை.

கைகுழந்தையுடன் தன் பெற்றோர் வீட்டில் தஞ்சம் புகுந்தால். அவனுக்காக அவன் அன்புக்காக அடி உதை வாங்கி இன்று ஒரு பயனும் இல்லை. அவள் சந்தேகம் சம்பளம் முழுவது கொடுத்தபோது மகாலக்ஷ்மி என்று பொற்றிய ஆண் வீட்டார் காசு தர மறுத்ததும் மூதேவி என்று சொல்வது ?? கணவன் காதலித்து மனம் செய்தாலும் தன் மனைவியை ஒரு துளி கூட நம்பாதது? இன்னுமும் அப்பா, அம்மா, அக்கா என்றால் அவள் என்ன தான் செய்வாள்.

காத்திருந்தாள் ஒரு வருடம் மேல் சென்றது. இதற்கிடையில் அவன் நன்கு சம்பாதித்தான், ஜெர்மனி வரையில் கூட சென்று வந்தான். மகளின் 2 ஆவது பிறந்தநாள் வந்தது, அவன் வரவில்லை ஒரு வாழ்த்து செய்தியும் கூட வரவில்லை. மகள் அப்பா எங்க என்று கேட்க ஆரம்பித்தாள். இதை சொல்லியாவது கேட்போம் என்று பார்த்தாள். குழந்தைக்கு காய்ச்சல் வேறு. என்ன சொல்லியும் பிரயோஜனம் இல்லை. அவன் வரவே இல்லை.

அங்கு எங்களை மதிக்காத அவள் இங்கு வர கூடாது என்று சட்டம். மகள்களிடமும் மன்னிப்பு கேட்டால் தான் வாழ்க்கை என்றாள் மாமியார். மகள்களும் நீ அவளுடன் வாழ்வது மற்றும் அவளை பார்க்க செல்வது உன் பெற்றோருக்கும் சகோதரிகளாகிய எங்களுக்கும் செய்யும் துரோகம் என்றார்கள். இவன் மனம் என்ன கல்லா இல்லை ஒன்றும் தெரியாதவனா அவர்கள் பேச்சை கேட்பதற்கு? அனால் அப்படிதான். கிழித்த கொற்றை மீறவில்லை.

அவள் நினைத்தால் "தம் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைகளை ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி செய்தது நம் தவறுதான்". ஆனாலும் அவள் தவறு ஒன்றும் செய்யவில்லை, பட்டியலில் இருந்த மாப்பிள்ளைகளில் இவனை அவளுக்கு முன்பே தெரியும், இருவரும் ஒரே பள்ளி தான், ஒரே ஊர் வேறு. பிடித்துப்போக இவரையே திருமணம் முடிக்க ஆசை படுவதாக தெரிவித்தாள். மகளின் ஆசைக்காக எதையும் எதிர்பார்க்காமல் நல்ல மனம் இருக்கிறதா என்று மற்றும் பார்த்த கல்யாணம் முடித்தனர்.

வசதியில் அவர்கள் பெண்வீட்டாரைவிட மிகவும் தாழ்ந்தவர்கள். அவள் பெரிதாக எதுவும் கேட்டதும் இல்லை. மேல் தட்டு பெண் என்பதையும், அவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. எதுவும் ஆசைப்பட்டது கூட இல்லை. இருப்பதை வைத்து திருப்தியாக அவனுடன் வாழ்ந்து வந்தால். அம்மா வீடு வசதியான வீடு அருகில் இருந்தும் அவள் அங்கு சென்று தங்கமாட்டாள். அவன் மனம் வலிக்குமே என்பதற்காக. கடன் சுமையில் இருக்கும் கணவனை கஷ்டப்படுத்த கூடாது என்று கிழிந்த துணி கூட உடுத்துவாள்.

வசதி இல்லாத பொது அவனை அவள் நேசித்தால், வசதி வந்ததும் அவன் இவளை கழற்றி விட்டான். இது தான் உண்மை என்று மனம் உடைந்தாள். இன்று அவள் விவாகரத்து முடிவிற்கு வந்துவிட்டால்.

"மனம் கசந்தது பஞ்சாயத்து பண்ணி இனி நான் சேர்ந்து வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். அவன் மீது நான் வைத்திருந்த அளவுக்கு அதிகமான காதல் இன்று தோற்றது, மனம் நிறைய ஆதங்கம், கோவம், வெறுப்பு தான் உள்ளது. மகளுக்காக தான் இத்தனைநாள் பொறுத்திருந்தேன், அனால் அவள் பிறந்த நாளில் கூட அவளை பார்க்கவராத ஒருவன் அவளுக்கு தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும்" என்கிறாள்.

அந்த பெண் இன்னும் இரண்டு நாட்களில் விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்வதாக சொல்கிறாள். அந்த பெண் என்ன செய்யவேண்டும்? வாழ்க்கை முடிந்ததா? அவன் வரவரைக்கும் இவள் காத்து இருக்கணுமா? போராடவேண்டுமா?

உங்கள் பதில்களை இங்கு பதிவு செய்யுங்கள். வேண்டும் என்றால் அவள் முகவரி மற்றும் அவனது முகவரியும் தருகிறேன்.கேட்டவர் : கீத்ஸ்
நாள் : 22-Feb-17, 5:36 pm
0


மேலே