போராளிகள்

(Tamil Nool / Book Vimarsanam)

போராளிகள்

போராளிகள் விமர்சனம். Tamil Books Review
மு.செந்தில்திபன் அவர்களால் எழுதப்பட்ட நூல், போராளிகள்.

மனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் தான் போராளிகள். மனித உரிமைக்காக அடக்குமுறையை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு.

பல உரிமைப் போர் களத்தில் புரட்சிப் பெண் போராளிகள் பலர் உலகப் பெண்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கின்றனர். அவர்களில் அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து காந்தி வழியில் போராடிக் கடுங்காவல் சிறை தண்டணை பெற்று தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூ கீ, மணிப்பூர் மண்ணில் உண்ணா நிலை அறப்போரில் பத்தாண்டுகளாக ஈடுபட்டுவரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதைப்போன்று, மக்களுக்கான மருத்துவர் பினாயக் சென், கல்விப் போராளி மலாலா, வெனிசுலாவின் பொதுவுடைமைப் போராளி சாவேஸ், இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி, விளிம்பு நிலை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள சமூகப் போராளி மேதா பட்கர், சுற்றுச்சூழல் போராளி வாங்காரி மாத்தாய், எழுத்துப் போராளி அருந்ததிராய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் போராளி ஆனது எப்படி? இவர்களின் போராட்டம் வென்றது எப்படி? என்பதையும், போராளிகளின் வாழ்வு எப்படிப்பட்டது? என்பதையும் இந்நூலை படிப்பதன் மூலம் உணரலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 7-Oct-14, 11:37 am

போராளிகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே