கிளியோபாட்ரா
(Tamil Nool / Book Vimarsanam)
கிளியோபாட்ரா விமர்சனம். Tamil Books Review
முகில் அவர்களால் எழுதப்பட்ட நூல், கிளியோபாட்ரா.
வரலாற்றின் ஒருபக்கமோ, கிளியோபாட்ராவை எகிப்தின் மாபெரும் பேரரசி, மயக்கும் கருப்பு பேரழகி, சிறந்த காதலி என கொண்டாடுகிறது. வரலாற்றின் மறுபக்கமோ கிளியோபாட்ரா ஆதிக்க வெறி கொண்டவள், அகந்தை நிறைந்தவள், ஒழுக்கமற்றவள் என்று கூடச் சித்திரிக்கிறது.
கிளியோபாட்ரா, தீராத நிரந்தரப் புதிர்கள் நிறைந்த ஆச்சரியம் . பண்டைய எகிப்திய மற்றும் ரோம் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெரும் சக்தியாக இருந்திருக்கிறாள்.அவளின் பாசமான அரவணைப்பில் பல ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் பல அரசியல் மூழ்கியிருக்கிறது.
ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி போன்ற வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களை தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள்.