கனவுகளை நகல் எடுப்பவன் - கவிதை நூல்
(Tamil Nool / Book Vimarsanam)
கனவுகளை நகல் எடுப்பவன் - கவிதை நூல் விமர்சனம். Tamil Books Review
நூலின் பெயர் : கனவுகளை நகல் எடுப்பவன்
ஆசிரியர் : செ.அமிர்தராஜ்
வெளியீடு : தாரணி பதிப்பகம்
விலை : ₹50
amirthanow@gmail.com
எளிமையான கவிதைகள் பல இடம்பெற்றுள்ளது. எதார்த்தமான வார்த்தைகளை கொண்டு நேர்த்தியாக பிணையப்பட்டுள்ள கவிதை நூல் !
வார்த்தைகளை தேடாமல் தானாக வரும் வார்த்தை பிரயோகம் மிகவும் அருமை !
ஒரு கவிதையை படித்து முடித்த பின்னர் அடுத்த கவிதை படித்தே தீர வேண்டும் என்ற ஆவல் வழுக்கிறது.
தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அட்டைப்படம் அருமை !
நூலிருந்து கவிதை :
நிற்கவும் இடமில்லாத பேருந்தில் பிடிமானமின்றி தவிக்கும் வேளையில் தான் புரிதலுக்குள்ளாகிறது அடிமாடுகளின் பயண அவதி !
எனது நட்பிற்கான அழைப்பை வெகுநாட்களாக நீ உறுதிபடுத்தாமளிருப்பதில் தெரிகிறது நமக்கிடையிலான நட்பு.
கவிதை நூலை பரிசளித்த கரிகாலன் அண்ணாவிற்கு மிக்க நன்றி !