மாயப்பட்சி

(Tamil Nool / Book Vimarsanam)

மாயப்பட்சி

மாயப்பட்சி விமர்சனம். Tamil Books Review
#மாயப்பட்சி #பாராஜா

நேற்று இரவு படித்து முடித்தேன்.

புத்தகத்தின் பெயர் : மாயப்பட்சி
ஆசிரியர் : பா. ராஜா
மணல் வீடு வெளியீடு

மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட கவிதை நூல். ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் அப்பட்டமாக தெரிகின்றன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல இக்கவிதையை நீங்கள் படிக்க தருகிறேன்.

“நகர் புறத்துச் சாலையின் குறுகியச் சந்து
யாருக்கும் தெரியும்
அது தீதுகளின் நிகழ்விடம்

பாதகங்களின் உச்சமாய்
விலை முடிக்கப்பட்டிருக்கிறாள்
ஏதுமறியா சிறுமியொருத்தி

இன்றைய இருளில்
நிச்சயம் நிகழக்கூடும்
ஒரு நதியின் மரணம் ! “

ராஜா அவர்கள் விசைத்தறி தொழிலாளி என்பதை அறிந்தேன். பெரிதாக பட்டப்படிப்பு ஏதும் படிக்கவில்லை என்பதையும் அறிந்தேன். உண்மையிலேயே மிக சிறந்த முயற்சி. புதுக்கவிதையில் இவருக்கு சிறந்த எதிர் காலம் பிரகாசிக்கின்றன. சாகித்திய அகாதமி விருது மிக அருகில் என்று கூட சொல்லலாம் !

முடிந்தால் வாசித்து பார்க்கவும்.

இது அவருக்கு முதல் புத்தகம் என கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் அண்ணா !

அவர் தொடர்புக்கு paaraja@gmail.com

சேர்த்தவர் : கோகதினேஷ்
நாள் : 13-Nov-15, 9:19 pm

மாயப்பட்சி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே