இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்
(Tamil Nool / Book Vimarsanam)
இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள் விமர்சனம். Tamil Books Review
புத்தகத்தின் பெயர் : இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்
ஆசிரியர் : ஜெகாதா
விலை : 40₹
கொஞ்சம் பழைய புத்தகமாக தான் தெரிந்தது
இருந்தாலும் பரவாயில்லை என வாங்கினேன். 40
ரூபாய்க்கு இத்தனை தகவல்களா என வியந்து விட்டேன்.
நேற்று இரவு படித்து முடித்தேன். பல பல
வித்தைகளில் தேர்ந்தவர்கள் நமது முன்னோர்களான
சித்தர்கள் !
ஒவ்வொரு கதையும் நமது உடலை
சிலிர்ப்பூட்டும் விதத்தில் உள்ளது. இப்புத்தகம் படித்த
பின் கொஞ்சம் நஞ்சம் இருந்த புறங்கூறுதல், உதவ
மறுத்தல் போன்ற அடியோடு அழிந்தது
என்னிடமிருந்து.
புத்துணர்ச்சியாக உள்ளது. சித்தர்கள்
வாழ்வில் இதெல்லாம் நடந்ததா என நம்மை ஆச்சர்யப்பட
வைக்கிறது.
சதுரகிரி மலை பற்றிய செய்திகள்
அடிக்கடி வந்தன இதற்காகவே சதுரகிரி ஒரு
முறையாவது போக வேண்டும்.
இந்த புத்தகம் படியுங்கள் ஞானம் பிறக்கும் !!