விஸ்வரூபம் -இரா முருகன்

(Tamil Nool / Book Vimarsanam)

விஸ்வரூபம் -இரா முருகன் விமர்சனம். Tamil Books Review
"மிகப்பெரிய கான்வாஸில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியம்!"-விஸ்வரூபம்

கவிதை,கட்டுரை,நாவல் ,திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா.முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம்,தமிழ் இலக்கிய பரப்பில் ஓர் முக்கிய மைல்கல் .மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழி பெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை...இது ஒன்று போதும்...

19 ம் நூற்றாண்டின் மையத்தில் சுழலும் இந்தப் பிரம்மாண்டமான நாவல்,காலத்தில் முன்பும் பின்பும் இயல்பாக நகர்ந்து சில கண்ணிகளை முடிக்கவும் அவிழ்க்கவும் செய்கிறது...

தனது வம்சாவளியிடம் இருந்து பெற்ற விஷயங்களே இந்தக் கதை என்கிறார் இரா.முருகன்.ஆறுக்கும் மேற்பட்ட மொழி நடைகள் ,ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்.3 நாடுகள்,8 ஊர்கள்,4 கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிறது இந்தக் கதை..நகைச்சுவை என்னும் மெல்லிய நூலிழை அனைத்துப் புள்ளிகளையும் சாதுரியமாக ஒன்றிணைக்கிறது.

அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக விரியும் விஸ்வரூபம் பரவசமளிக்கும் ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கிறது...காசர்கோட்டு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு சுவாரசியமான மாந்திரீக யதார்த்த உலகத்துக்குள் பிரவேசிக்கலாம்....

கிழக்கு பத்திப்பகம் வெளியீடு செய்திருக்கும் விஸ்வரூபம் உண்மையிலேயே விஸ்வரூபப்
படைப்பு தான்....

கேரளா பிராமணக் குடும்பமும் அதிலிருந்து கிறித்துவத்திற்கு மாறிய சில உறவுகளும் கொண்டு பயணிக்கிறது விஸ்வரூபம்...

1860 ல் தொடங்கி 1940 வரையான நுண் வரலாற்று சிறப்புமிக்க பதிப்பு இது.....தெரிசாவும் மகா தேவய்யன்னும் அவர் சகதர்மிணி பர்வத வர்த்தினியும் குட்டியம்மினியும் கூடவே பயணிக்கிறார்கள் வாசிப்பு முடிந்த பின்னும்.....

பிராம்மாண்டமான படைப்புகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் சிறந்த படைப்பு இது....இதன் பிரம்மாண்டமும் ஆச்ச்யர்ங்கலந்த எதிர்பார்ப்புமுமே படைப்பின் வெற்றி!!

சேர்த்தவர் : கார்த்திகா
நாள் : 17-Dec-15, 9:51 am

விஸ்வரூபம் -இரா முருகன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே