விடிவதற்குள் வா
(Tamil Nool / Book Vimarsanam)
விடிவதற்குள் வா விமர்சனம். Tamil Books Review
தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை, கல்கியில் தொடர்கதையாக வந்தது.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும் போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று,ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன.பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.