கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்

(Tamil Nool / Book Vimarsanam)

கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம் விமர்சனம். Tamil Books Review
வாசிப்பை நேசிப்போம்

வாசிப்பு சவால் 2021/13/24

புத்தகத்தின் பெயர்: கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்
ஆசிரியர் பெயர்: நாகை எம் பி அழகிய நாதன்
வெளியிட்டோர்: பாவை பதிப்பகம் ராயப்பேட்டை
போன் 28482441.

பக்கம்: 80

விலை ரூபாய்: 30

புத்தகத்தில் 20 கட்டுரைகள் அமைந்துள்ளன

கட்டுரையின் தொடக்கத்தில் வெற்றிக்கு சில பொன்மொழிகள் என்ற தலைப்பில் உலகப் புகழ்பெற்ற வெற்றியாளர்களின் பொன் மொழிகள் பொறிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சாக்ரடீஸ், புத்தர், பெர்னாட்ஷா, ஆண்டர்சன்' பித்தாகரஸ்' தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், ஷேக்ஸ்பியர், பேகன்' ஓசோ' எமர்சன்' போன்றவர்களின் பொன்மொழிகள்.

கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம். முதல் கட்டுரையில் எடுத்த எடுப்பில் ராமேஸ்வரத்தில் ஒரு தீவில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பள்ளிப்பருவ நாட்களில் வறுமை வாட்டி வதைத்த போது தினமும் ரயில் நிலையத்துக்குச் சென்று செய்தி பத்திரிக்கைகளை சுமந்து வாழ்க்கையில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியையும் சுமந்து சென்று பத்திரிகைகளை வீடு வீடாகச் சென்று போட்டு விட்டு அதன்பின் பள்ளிக்கு சென்றவர் தான் பின்னாளில் எல்லா பத்திரிக்கைகளிலும் தான் வரக்கூடிய வராக உயர்ந்தார். என்று குறிப்பிட்டு அவருடைய கனவு நனவானது கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார்.

இரண்டாவது கட்டுரையில் அம்மா மீது அன்பு வையுங்கள் என்று ஆரம்பித்து

10 ஆசிரியர்கள் ஒரு குழுவிற்கு சமம் 10 குரு ஒரு தந்தைக்கு சமம் 10 தந்தை ஒரு அம்மாவுக்கு சமம் என்று சான்றோர் சொன்னதாக குறிப்பிட்டு அம்மாவின் அன்பை வெளிப்படுத்தும் கதையையும் குறிப்பிட்டிருக்கிறார். காம மாயை பிடித்த பிடித்த ஒரு வேசியிடம்தன்னுடைய மகன் அகப்பட்டுக் கொண்டு அவனுடைய அம்மாவுடைய இதயம் வேண்டும் என்று கேட்க அதைக் கொண்டு வந்து தருகிறேன் என்று அவனும் வந்து அம்மாவிடம் சொல்ல அவள் தாய் என்னை கொன்று என் இதயத்தை எடுத்துச் சென்று அவரிடம் கொடு என்று சொல்ல அவனும் அவ்வாறே ஆசையின் காரணமாக அம்மாவின் இதயத்தை பிளந்து எடுத்துக் கொண்டு ஓடுகிறான் ஓடும் வழியில் கல் தடுக்கி விழுகிறான் எழுந்தவுடன் கையிலிருந்த இதயம் பத்தடி தூரம் சென்று விழுகிறது இவன் காலில் அடிபட்டதால் ஐயோ அம்மா என்று அலறுகிறார் தன்னுடைய மகனுக்காக அந்த இதயம் இயங்குவதை குறிப்பிட்டு அப்படி தன்னை மதிப்பவரை கண்கண்ட தெய்வமாக தாய் தந்தையர் இருப்பதால் அவர்களை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்று இரண்டாவது கட்டுரையில் முடிக்கிறார்.

மூன்றாவது கட்டுரையில் உழைப்பு வேர்வையை சிந்தனைகள் என்ற தலைப்பில் சர் ஐசக் நியூட்டன் ஒரு நாய் வளர்த்ததாகவும் அந்த நாய் ஆராய்ச்சிக்கூடத்தில் தங்கியிருந்ததாகவும் ஒரு நாள் 20 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வியர்வை சிந்தி கண்டுபிடித்த ஆராய்ச்சி முடிவுகளை எழுதிய தாள்களை மேசையின் மீது வைத்துவிட்டு வெளியேசெல்ல இவர் சென்றவுடன் நாய் அங்குமிங்கும் குதித்து ஓடியதில் அந்த ஆய்வுக்கூடம் தீப்பற்றி எரிந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் எரிந்து விட்டதாகவும் பின்பு அவர் வந்து பார்க்கின்றபோது நாயால் தான் ஏற்பட்டது என்பதை தெரிந்துகொண்டு நாயை அருகில் அழைத்து ஓ!டைமண்! நீ என்ன காரியம் செய்து விட்டாய் என்று அதை தடவி கொடுத்து மீண்டும் பழையபடி உற்சாகமாக அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அடைய கண்டுபிடிப்புகளை மீண்டும் கண்டுபிடித்தார் என்று முடிக்கிறார் சறுக்கல்கள் வருகின்ற போது மீண்டும் வேகமாக உழைக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரை நமக்கு காட்டுகிறது

அதேபோல் விவேகானந்தர் அலெக்சாண்டர் சார்லி சாப்ளின் அமெரிக்க அதிபர் லிங்கன் போன்றவர்களெல்லாம் குறிப்பிட்டு காட்டி எவ்வாறெல்லாம் அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்துக்களை எடுத்துச் சொல்லியும் முயற்சி பயிற்சி இருந்தால் வெற்றி பெறலாம் என்று எழுதுகிறார்.

வாய்ப்புகள் வசப்படும் என்ற தலைப்பிலே கிடைக்கின்ற வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று சொல்லக்கூடிய கதைகளையும், நேரம் நல்ல நேரம் என்ற தலைப்பில் நேரம் சகுனங்கள் பார்க்காமல் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை குறிப்பிட்டு தவறவிட்ட ஒவ்வொரு நேரமும் மீண்டும் வராது என்பதை குறிப்பிட்டு எழுதிய கட்டுரையும்,

அறிவை வளர்த்துக் கொண்டால் உலகம் நம்மை மதிக்கும் என்ற தலைப்பில் கட்டுரைகளையும்,

வைட்டமின் ப என்பது பணம் சம்பாதிக்க கற்றுக்கொண்டால் செல்வமும் சொல் வளமும் செல்வாக்கும் நமக்கு பெருகிவிடும். தானே அனைத்தும் நடந்துவிடும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்றும்,

உற்சாகம் தரும் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் எதில் நாம் உற்சாக ஏற்படுகிறதோ அதை தொடர்ந்து செய்யவேண்டும் என்றும். துணிந்து நில்லுங்கள் தொடர்ந்து செல்லுங்கள் என்ற தலைப்பில் நம்மை எதிர்த்து வரும் அனைத்து காரியங்களையும் நாம் துணிந்து எதிர் கொண்டோம் ஆனால் அது விலகிஓடும் என்பதையும். தன்னம்பிக்கை தலைவன் ஆக்கும் என்ற கட்டுரையும். குறைகளை களையுங்கள் என்ற கட்டுரையில் குறைகள் இருக்கத்தான் செய்யும் அந்த குறைகளை எல்லாம் நிறைவாக மாற்றவேண்டும் குறைபாடு உடையவர்கள் தான் சாதித்து இருக்கிறார்கள் என்ற கட்டுரையும். எண்ணங்கள் எண்ணியபடி வாழவைக்கும் என்பதை குறிப்பிட்டு ஒரு கதையையும் அவர் அவர் குறிப்பிடுகிறார். இதுபோன்று பல்வேறு தலைப்புகளில் மாணவர்களை இளைஞர்களை ச படிப்பவர்களை கஷ்டத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பி அவரவர் செய்கின்ற காரியங்களில் தன்னம்பிக்கை கொள்ள செய்து வெற்றி பெற வழி வகுக்கக் கூடிய மிகச் சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது 5 பதிப்புகளை கொண்டுள்ள இந்த புத்தகம்

வார்த்தை அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண நடையில் எழுதப்பட்டு படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது

குறிப்பாக இந்த புத்தகம் மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகமாக இருக்கிறது.

சேர்த்தவர் : மு குமார்
நாள் : 25-Jul-21, 10:16 am

கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே