எடுத்துரைப்பியல் நோக்கில் கபிலரின் அகநானூற்றுப் பாடல்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

எடுத்துரைப்பியல் நோக்கில் கபிலரின் அகநானூற்றுப் பாடல்கள்

எடுத்துரைப்பியல் நோக்கில் கபிலரின் அகநானூற்றுப் பாடல்கள் விமர்சனம். Tamil Books Review
நூலாசிரியர் திருமதி பேகம் அவர்கள் பாடலடிகளை நுண்ணிதின் நோக்கி/ நுண்ணாய்வு செய்து இதுவரை அகநானூற்றுப் பாடல்களுக்கு உரை எழுதியோர் கூறாத பல அரிய கருத்துக்களை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் தலைவன், தலைவி, தோழி,செவிலி ஆகியோரின் மனங்களைப் படிப்போர்க்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஒரு சொல் உணர்த்தும் பல்வேறு பொருட்களைக் குறிப்பிட்டு பொருள் ஒவ்வொன்றினோடும் பாடல் காட்சிகளை அல்லது நிகழ்ச்சிகளை இயைபு படுத்தி புதிய நோக்கில் பாடல் அடிகளுக்கு விளக்கம் தருகிறார். இந்த நெறி சிறப்பாக் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கபிலரின் அகநானூற்றுப் பாடல்களில் அமைந்துள்ள "எடுத்துரைப்பியல்" திறனை நன்கு ஆய்ந்து விளக்கி வெளிப்படுத்தி யிருக்கிறார். நூல் ஆசிரியர் திருமதி தா.பேகம் அவர்கள் இதே நோக்கில் சங்கப்பாடல்களை நுணுகி ஆய்ந்து புதிய நோக்கில் பாடல்களுக்கு விளக்கம் தரும் வகையிலும், அரிய செய்திகளை வெளிப்படுத்தும் வகையிலும் நூல்களை எழுத வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். முனைவர் கோ.விசயராகவன்.
இயக்குனர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

சேர்த்தவர் : கவிஞர் பெஅசோகன்
நாள் : 27-Dec-21, 7:57 pm

எடுத்துரைப்பியல் நோக்கில் கபிலரின் அகநானூற்றுப் பாடல்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே