நடந்து செல்லும் நீருற்று
(Tamil Nool / Book Vimarsanam)
நடந்து செல்லும் நீருற்று விமர்சனம். Tamil Books Review
கதைகள் தனெக்கென ஒரு உலகை கொண்டிருகின்றன.
அன்றாட வாழ்வின் சொல்லப்படாத துக்கங்களும் தொடப்படாத தனிமைகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகளை ஆற்றுப்படுத்த முடியாத கேவல்களின் சித்திரங்களாக மாற்றுகின்றன.
ஆழம் காண முடியாத இருளில், உடைத்த மனோரதங்களுடன் வாழ்வைக் கடந்து செல்லும் இக்கதைகளின் பாத்திரங்கள் யார் மீதும் எந்தப் புகார்களும் கொண்டவையல்ல.