கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அதிமுக-வின் தேர்தல் அறிக்கை பற்றிய கருத்து


ஜெயலலிதா வெளியிட்டுள்ள அதிமுக-வின் தேர்தல் அறிக்கை பற்றிய கருத்து.

1. நதிகளை தேசிய மயமாக்கி, இணைக்கும் திட்டம்,

2. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தடுக்கப்படும்.

3. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை.

4. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை.

5. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை.

6. அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படும்.

7. இலங்கையில் தனி ஈழம் தேவையா என அறிய வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுக்கப்படும்.

8. இலங்கையில் இனப்படுகொலை செய்தோர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.

9. சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத்தர உறுதி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

10. மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட அதிமுக பாடுபடும்.

11. மத்தியில் ஊழலற்ற அரசு அமைய அதிமுக உத்தரவாதம்.

12. ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் வரிவிலக்கு அளிக்கப்படும்.


vickramhx 26-Feb-2014 இறுதி நாள் : 05-Mar-2014
Close (X)



உறுப்பினர் தேர்வு

இந்த வாக்குறுதி மிகவும் சிறப்பாக உள்ளது

8 votes 32%

எல்லா பிரிவினரையும் ஈர்க்கும் விதமாக இல்லை

1 votes 4%

இதில் ஒன்றும் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை

16 votes 64%

கருத்து கூற விரும்பவில்லை

0 votes 0%

வாசகர் தேர்வு

இந்த வாக்குறுதி மிகவும் சிறப்பாக உள்ளது

11 votes 39%

எல்லா பிரிவினரையும் ஈர்க்கும் விதமாக இல்லை

2 votes 7%

இதில் ஒன்றும் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை

15 votes 54%

கருத்து கூற விரும்பவில்லை

0 votes 0%


மேலே