பெண்

உயிர் கொடுத்து

ஊண் வளர்க்கும்

பொழுது - தாயாய்

ஈடிணையில்லா தியாகம்!!

எண்ணங்களின் வடிகாலாய்

கனவுகளின் உருவமாய்

எண்ணும் போது -மகளாய்

அளவில்லா பாசம்!!!

மென்மையாய் உரிமை கொண்டு

கண்டிப்பால் வழிநடத்தும்

நேரத்தில் - சகோதரியாய்

என்றும் மாறா ஆதரவு!!!

தன்னுயிரில் பாதியாக

தன் துணையை

கொண்ட போது - மனைவியாய்

கபடமில்லா காதல்!!!

எதிர்வரும் சவால்களை

துணிச்சல் கொண்டு

எதிர் நோக்கும் போது

உலகின் சக்தியாய் - புதுமைப் பெண்!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 6:40 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 346

மேலே