எது சுதந்திரம் ?
சுதந்திர தினமா ?
கொண்டாட்டமா ?
ஏன் ? எதற்கு ?
அடிமையாக இருந்தோமே அதற்கா
முதுகெலும்பு இல்லாமல்
அடிமையாக இருந்த
புலுக்கலுக்கு ஏது சுதந்திரம் ?
சுதந்திரம் வாங்கி தந்தார்களா ?
எந்த கடையில் ?
நாம் என்ன
சேற்றில் ஊறூம் எருமைகளா
அடிமைப் படுத்தவும் -பின்பு
சுதந்திரம் அளிக்கவும்
மனிதர்கள், தன்மானம் உள்ள மனிதர்கள்
சுதந்திரம் தின கொண்டாட்டம்
இனி தேவை இல்லை
நிறுத்திக்கொள்வோம்
சுதந்திர தினம் கொண்டாட்டடும்
தினம் அல்ல , துக்க தினம்
இனி அப்படியே அனுசரிப்போம்
இத்தனை வருடம்
அடிமை வாழ்க்கைக்கு
எதற்கு கொண்டாட்டம்?
இது ஒரு பாடம்
வந்தவனெல்லாம் ஆண்டுவிட்டான்
இருந்ததை எல்லாம் சுறண்டிவிட்டான்
காலிப் பானையோடு
கையேந்தி நிக்கின்றோம் !
புரிகிறதா ? எது சுதந்திரம் ?
உன்னை எப்பொழுது நீ ஆள்கிறாயோ
அப்பொழுதுதான் நீ சுதந்திரம் அடைவாய் !