யார் செய்த குற்றம்?

நாகர்கோவில்: 2வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் எனது கணவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த நான், பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் திவ்யா.

திவ்யாவின் கணவர் கண்ணன் வீட்டில் அவருடன் பிறந்தவர்கள் 4 அண்ணன் தம்பிகள். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. 3 பேருக்குமே பெண் குழந்தைகள். இதனால் கண்ணன் மூலமாக ஆண் வாரிசை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அடுத்த குழந்தையும் இரட்டைப் பெண்ணாக பிறந்ததால் கண்ணன் வீட்டார் அதிருப்தி அடைந்தனராம்.மீண்டும் பெண் என்பதால் திவ்யாவை கண்ணன் வீட்டார் யாரும் கண்டு கொள்ளவில்லையாம். கண்ணனே கூட சரியாக மனைவியிடம் பேசுவதில்லையாம். பிறந்த குழந்தைகளைக் கூட வந்து பார்க்கவில்லையாம். இதனால் திவ்யாவுக்கு பெரும் பயம் வந்து விட்டது. இதனால் இந்த நிலைமைக்குக் காரணமான அந்த பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்லும் முடிவுக்கு வந்துள்ளார்.

பாலூட்டும்போது இரு குழந்தைகளையும் மார்போடு மார்பாக சேர்த்து இறுக்கி வைத்து மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார் பின்னர் தாய்ப்பால் ஊட்டியபோது புரைக்கேறி இறந்து விட்டதாக கூறியுள்ளார்..!

குற்றவாளி யார்.?
1.உதாசீனபடுத்திய கணவனா?
2.ஆணுக்கு ஆசைபடும் கணவன் உறவுகளா?
3.தனிமையாக்கபட்ட தாயா?
4.பெண்களை பார்க்கும் சமூகமா?



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 7-Jun-17, 9:32 am
0


மேலே