விரும்பியே தோற்க்கிறேன்

உன் முத்த மழையினில்
நித்தம் நனைந்திட
சித்தம் விரும்பதடி
மனம் பித்து பிடிக்கும் முன்
உன் மௌனம் கலைத்து
ஒரு வார்த்தை சொல்லடி
கண்கள் சொல்லிடும்
வார்த்தையில் மெய்யில்லை
மனதால் சொல்லடி
என் மனதை வெல்லடி
எத்தனை கவிதைகள்
எத்தனை அர்த்தங்கள
அத்தனை அழகினை
மிஞ்சிடும் உன் அழகடி
உன் அழகினை மிஞ்சிடும்
கவிதையை சொல்லிட
தினம் தினம் முயன்று நான்
விரும்பியே தோற்க்கிறேன்

எழுதியவர் : ருத்ரன் (8-May-24, 7:39 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 93

மேலே