ஆயுத எழுத்து

(Aayutha Ezhuthu)

ஆயுத எழுத்து

தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆயுத எழுத்து (ஃ) அல்லது ஆய்தம் ஆகும். மூன்று புள்ளிகளுடைய எழுத்தை நாம் ஆய்த எழுத்து என்கிறோம்.

ஆய்த எழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். இவ்வாறு தனித்து வரும் ஆற்றல் இல்லாததினால் இது சார்பெழுத்தாயிற்று.

வேறு பெயர்கள்: ஆய்தம் (பெயர்ச்சொல்), அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று

ஆயுத எழுத்து 3 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் இது முப்பாற்புள்ளி, முப்புள்ளி எனவும் வழஙப்படுகிறது.

உதாரணம்

அ ஃ து - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
இ ஃ து - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
எ ஃ கு - 'எ' குறில். 'கு' வல்லின உயிர்மெய்



மேலே