இடைத் தொடர்க் குற்றியலுகரம்

(Idai Thodark Kutriyalugaram)

இடைத் தொடர்க் குற்றியலுகரம்

இடையின எழுத்துக்களைத் தொடர்ந்து உகரம் வந்தால், அது இடைத் தொடர்க் குற்றியலுகரம் (இடையினத்தைத் தொடர்ந்த குற்றியலுகரம்) ஆகும்.

கொய்து, மல்கு, எள்கு, மாழ்கு ஆகியவற்றில் இடையின எழுத்தைத் தொடர்ந்து உகரம் வருவதால் குற்றியலுகரம் உண்டானது.

உதாரணம்

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்

இதில் நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும், அது வரும்மொழி 'உ' உடன் சேர்ந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று.



மேலே