குற்றியலுகரம்

(Kuttriyalukaram)

குற்றியலுகரம்

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்

ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா : கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் (குறுகிய ஓசையுடைய உகரம்) ஆகும்.

உதாரணம்

காடு
இந்த சொல்லில், கடைசியில் வரும் டு எனும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து (ட்+உ= டு)), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன் (கா), வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு) வந்துள்ளதைப் பார்க்கலாம்.



மேலே