செய்யுளிசை அளபெடை

(Seiiyulisai Alapedai)

செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையைநிறைவு அல்லது இசையைக் கூட்டச் செய்வது செய்யுளிசை அளபெடை ஆகும்.

உதாரணம்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

இதில் அ எனும் எழுத்து இசையை நிறைக்க வந்துள்ளது கடாக் களிறு என எழுதினால் செப்பலோசை குன்றும்.
கடா - நிரை - இது சீர் ஆகாது.
கடாஅ என இசை கூட்டும்போது புளிமா என்னும் வாய்பாட்டுச் சீராக அமைந்து மா முன் நிரை என்னும் வெண்டளையாகி வெண்பாவுக்கு உரிய செப்பலோசையாகிவிடுகிறது.



மேலே