சொல்லிசை அளபெடை

(Sollisai Alapedai)

சொல்லிசை அளபெடை

ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.

உதாரணம்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

'அளவு' என்பது அளவுதலைக் குறிக்கும் வினைச்சொல். 'அளவி' என்பது இதன் வினையெச்சம்.
'அளவி' என எழுதியிருந்தாலும் செய்யுள் தளை தட்டாது. பொருளும் மாறாது. அப்படியிருக்க 'அளைஇ' என்று இசைச்சொல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.



மேலே