தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
பல்வகைப் பாடல்கள் புயற் காற்று ஒரு கணவனும் மனைவியும்
பல்வகைப் பாடல்கள் புயற் காற்று ஒரு கணவனும் மனைவியும்
மனைவி:
காற்ற டிக்குது, கடல் குமுறுது,
கண்ணை விழிப்பாய்,நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது, பள்ளியிலே. 1
கணவன்:
வானஞ் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு,
தேவி,அருள்செய்ய வேண்டுகின்றோம். 2
மனைவி:
நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே,
இந்தநேரமிருந்தால்என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?. 3
பு{ நளவருடம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி புதன்கிழமை இரவு,
புதுவையில் வீசிய புயற்காற்றைக் குறிக்கும். நள வருஷம் 1916-17ஆம்
வருடத்தைக் குறிப்பதாகும்.}