சுவாசம்

எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நான் இல்லாத போதே
நிகழ்ந்துவிடுகின்றனே

ஒவ்வொரு முறையும்
எதையும்
ஸ்பரிசித்து உணர்வதற்குள்
அவை நிகழ்ந்து முடிகின்றன

நான்
முயன்றுதான் பார்க்கிறேன்
என்றாவது
எதுவாயினும்
நிகழ்வதற்கு முன்பே
நான் அதைத் தொடுவதற்கு

ஆயினும்
என் முயற்சிகளைத் தோற்கடித்து
எனக்காக நிகழும் அவை
நானில்லாமலேயே நடந்துவிடுகின்றன

மலர்கள்
மனிதர்களுடனான
உலகம்
மிகப் பெரியது
என்னை விட

நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா
என் சுவாசம்
நானின்றி நிகழ்வதை


கவிஞர் : சல்மா(2-May-14, 2:34 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே