கனவு

மலைகள் என்னும்
குறும்பற்கள்
முளைத்திராத
பூதலத்தின்
கொக்குப் போலக்
காலூன்றி
நிற்கும் மரங்கள்.
அதற்கப்பால்
எழுந்து வீழ்ந்து
தடுமாறும்
நடக்கத் தெரியாக் கடலலைகள்
யார் சென்றாலும்
விரல் நீட்டும்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:16 pm)
பார்வை : 0


மேலே