நெருப்பை அழுக்குச் செய்த

நெருப்பை அழுக்குச் செய்த
ஜாதி நம் ஜாதி
நெருப்புக்கு ஜாதி சொல்லி
நெருப்பையே எரித்தோம்
நெருப்புக்குப் பெயர் வைப்பதில்
நூற்றாண்டுகள் எரித்தோம்
நெருப்பு கண்டு
வியந்தவன் தீ என்றான்
பயந்தவன்
பகவான் என்றான்
யோசித்தவன்
திரியில் அடக்கி தீபமென்றான்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:30 pm)
பார்வை : 0


மேலே