நறுக்குகள் - மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 8:07 pm)
பார்வை : 74


மேலே