மெசியாவின் காயங்கள் - வனம்

மனதுக்குள் படிந்து பரந்துறங்கும்
நிலமலையின் நிழல் தொடர்ச்சி
புரண்டு படுக்கும் நேரம்
சிகர அந்நியத்தின் உச்சியிலிருந்தாய்.
அங்குமிருந்தது ஒரு வனம்.

கூடையோடும் கூந்தலோடும்
சிறகாடி புன்னகை தேடும்
பெண்ணொருத்தி
பள்ளத்தாக்கின் ஆழத்தில்.
அங்குமிருந்தது ஒரு வனம்.

நடுக்காட்டின் பெரும் சிரிப்பில்
நடுங்கி உதிர்ந்தபோது
இருவேறு கால் தடங்கள்
இருவேறு காம்புகளில்

கைத் தடயங்களுக்கான பிரார்த்தனையோடு
அங்குமிருந்தது ஒரு வனம்.


  • கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா
  • நாள் : 8-May-11, 8:55 am
  • பார்வை : 154

பிரபல கவிஞர்கள்

மேலே