அலை

அலைமேல் அலை
அலைகிறது அலை

கட்டுமரங்கள் மேல்
மீனவர்கள்

கடல்
இசைக்கும் ராகம்

சூரியோதயம்
சந்திரோதயம்

தாய்தயவில்
தெற்குக் கடைசியில்.


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:34 pm)
பார்வை : 109


மேலே