விக்ரமாதித்யன் குறிப்பு

(Vikramaditya)

 ()
பெயர் : விக்ரமாதித்யன்
ஆங்கிலம் : Vikramaditya
பாலினம் : ஆண்
பிறப்பு : 1947-09-25
இடம் : தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : நம்பிராஜன்

திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம், தென்காசி, சென்னை மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார். தன் வாழ்நாளில் பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ள இவர், சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் பணிபுரிந்துள்ளார்.

”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்` உடபட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.

இவரது மூன்று படைப்புக்களை (எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு, அவன் அவள், தன்மை முன்னிலை படர்க்கை) சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

இவர் எழுதிய புகழ் பெற்ற வரிகள்,
“ விரும்பியது நதிக்கரை நாகரீகம்

விதிச்சது நகர நாகரீகம்
விக்ரமாதித்யன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே